தரவட்டத்தின் பலாபலன்களை இப்படத்தின் மூலம் விளங்கி கொள்ளலாம்
தற்கால மாறிவரும், வளர்ந்துவரும் உலகில் சமூகத்தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் காலச்சக்கரத்தின் வளர்ச்சிக்கும் வேகத்திற்கும் ஏற்ப விரிந்து, வளர்ந்து செல்கின்றன. ஒவ்வொரு சமகாலத் தேவைகளையூம் கருத்திற்கொண்டே உலகில் சகலதுறைகளும் புதிது புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கல்வித்துறையானது தனிச்சிறப்புப் பெற்று அதிஉயர் சாதனைகளைப் படைத்து வருகின்றது. மாறிவரும் யுகத்தில் தற்கால யுகமானது அறிவியல் யுகமாகப் பரிணமித்துள்ளதை யாவரும் அறிவர். இவ் அறிவியல் யுகமானது ஒவ்வொரு வினாடியூம் புதுமைகளைப் படைத்துச் செல்கின்றத. அப்படிப்பட்ட அறிவியல் யுகத்தின் வளர்ச்சிக்கேற்ப தற்கால மாணவர்களைச் சிந்தனை விருத்தியுடையவர்களாகவும், ஆக்கத்திறன் மிக்கவர்களாகவூம், சாதனைகள் படைப்பவர்களாகவூம் உருவாக்கவேண்டிய பெரும் பொறுப்பு ஆசிரியரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. இச் சவாலை எதிர்கொள்ள வேண்டுமானால் முதலில் ஆசிர்யர்கள் வாண்மை பெற்றவர்களாகவூம் சமகால விடயங்கள் அனைத்தையும் உடனுக்குடன் உள்வாங்குபவர்களாகவும் இருத்தல் மிக அவசியமாகின்றது.
நாளாந்த வாழ்க்கையில் ஒவ்வொரு
தனிப்பட்டவர்களும் தாம் விரும்பியோ விரும்பாமலோ குறித்த சில முறையில் தாம் நடந்துகொள்வதற்கான
தெரிவைச் செய்து கொள்கின்றனர். இதற்கான உரிமையூம் சுதந்திரமும் இத் தனிநபர்களுக்கு
உள்ளது. இதனால் தனிப்பட்டவர்களை அவர்தம் நடத்தையை மாற்றிக்கொள்வதற்காக மற்றவர்கள்
யாரும் வற்புறுத்த முடியாது.
பாடசாலைகளிலும் மாணவர்களின் நடத்தையில்
பொருத்தமான மாற்றத்தினைக் கொண்டுவர
அவர்களை வற்புறுத்தக் கூடாது. மாறாக முதலில் மாணவர்களின் ஆரம்ப நடத்தையை
ஆசிரியர்கள் நன்கு அறிந்திருத்தல் மிக அவசியமாகின்றது. ஆசிரியர்கள் வற்புறுத்தலின்
ஊடாக எந்தவொரு மாணவனது நடத்தையிலும் மாற்றத்தி;னைக் கொண்டுவர முடியாது. இதற்காக ஓர் ஆசிரியர்
தனது நடத்தையில் கட்டுப்பாடுகள், சில பொருத்தமான மாற்றங்கள், மற்றும் கற்பித்தல்
உத்திகள் என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களின் நடத்தையில் சுலபமாக
மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
அதாவது வகுப்பறைச் செயற்பாடுகளிலும் இதர
செயற்பாடுகளிலும் ஈடுபடும் ஆசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட விடயத்தை மாணவருக்கு
எளிதில் விளங்கச் செய்வதற்கும், இமாணவருக்குக்
கற்றலில் விருப்பத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தும் ஒருவழிமுறையாகவே
கற்பித்தல் அமைகின்றது. ஆசிரியர்களுக்கு இக் கற்பித்தல் முறைக்கும் அப்பால்
பொதுவான சில விசேட திறன்கள் உள்ளன. அவையே கற்பித்தல் உத்திகள் என
இனங்காணப்படுகின்றன. பல்வேறுபட்ட கற்பித்தற்செயன்முறைகள், விரிவயுரைகள்,
கலந்துரையாடல்கள், பின்னுhட்டல்கள், வினாக்களை வினவவும்
உத்திகள், மாதிரி, போல, ஒப்ப நடிபாங்குகள், நவீன உபகரணக் கையாள்கைகள், குழுச்
செயற்பாடுகள், களக்கற்கைச் செயற்பாடுகள் போன்றவற்றைக் கூறலாம். இவை
எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடன் அன்பாகப் பேசுதல், அவர்கள் கூறுவனவற்றைப்
பொறுமையூடனும் ஆர்வத்துடனும் செவிமடுத்தல், அவர்கள் கூறும் பதில்களை முதலில்
நேர்ப்பாங்குடன் ஏற்றுக்கொண்டு அதற்கு உடன் பாராட்டுக்கள் வழங்கி, அல்லது கைதட்டி
ஊக்கப்படுத்திப்பின் அப்பதிலில் திருத்தங்களை அல்லது மாற்றங்களை ஏற்படுத்திக்
கொள்வதனுhடாக அவர்களது
மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது இருப்பதுடன், அவன்; தான்சொல்பவற்றைக் ஆசிரியர் கேட்கின்றார் தன்னை
அங்கீகரிக்கின்றார் என்ற மனநிலையை அவர்களுக்குத் தோற்றுவிக்க முடியூம். இவ்வாறான உத்திகளை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம் மாணவர்களின்
நடத்தையில் நல்ல மாற்றங்களை இலகுவாக
ஏற்படுத்திக் கொள்ளலாம். இக் கற்பித்தல் உத்திகளானவை ஆசிரியருக்கு ஆசிரியர்
வேறுபட்ட வகைகளில் வேறுபட்ட பாங்குகளில் அமைவதையூம் காணலாம். ஆசிரியர்கள் இவ்
உத்திகளைக் கையாண்டு மாணவர்களை ஆட்கொள்வதன் மூலமும், அவர்களுக்குக் கற்றலை
விளையாட்டுடனும், செயற்பாட்டுடனும் கூடியதாக மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவதன் மூலமும்
ஆசிரியர்கள் மாணவர்களைத் தம்வசப்படுத்திக் கொள்ளலாம். இந் நிலையில் அவர்களின்
நடத்தையில் மாற்றத்தை இலகுவாக ஏற்படுத்தி கற்றலை விருப்புடனும் ஆர்வத்துடனும் கற்று
அவர்களை ஒரு நல்ல எதிர்காலச் சூழலுக்கு இட்டிச் செல்லலாம்.
ஆனால் இக்கற்கை உத்திகள் பொதுவாக அனேக ஆசிரியர்களாலும் தமது அன்றாட
வகுப்பறைச் செயற்பாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற போதிலும் அவை முழுமை
பெறுகின்றதா…? என்பதில்
வெற்றிடங்கள் காணப்படத்தான் செய்கின்றன. இவற்றின் பிரதிபலிப்பே மாணவர்களின்
ஒவ்வாநடத்தைகள், பிறழ்வுத் தன்மைகள், கற்றலில் நாட்டமின்மை, விரப்தி மனப்பாங்கு,
எதையயும் ஏற்றுக்கொள்ளாமை போன்றனவாகும். இந்நிலையைப் போக்க ஆசியர்கள் முதலில்
தம்மை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் வண்மை விருத்திச் செயற்பாடுகளில்
ஈடுபடுவதன் மூலம் புதிய கற்றல் கற்பித்தல் முறைகள், ஆசிரியர் மாணவர் தொடர்பாடல்
முறைகள் போன்ற புதிய அனுபவங்களைப் பெறுவதனுடாக மாணவர்களின் நடத்தையில் சுலபமாக மாற்றத்தை ஏற்படுத்திக்
கொள்ளலாம்.
மேலும் ஆசிரியர்கள் புதிய கற்றற்கோட்பாடுகள்,
பிள்ளை விருத்திக் கொள்கைகள், வகுப்பறைமுகாமைத்தவம், கல்வி ஆலோசனையயும்
வழிகாட்டலும், கல்வித் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அறிந்தும், கற்றும் அவற்றை வகுப்பறைகளில்
பிரயோகிப்பதனுடாகத் தொழில் வண்மை பெற்று தமது நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தி
அதனுடாகவும் மாணவர்களது நடத்தையில் மாற்றங்களை வெகுவாக ஏற்படுதத்திக் கொள்ளலாம்.
நல்ல ஒரு வினைத்திறன்;மிக்க ஆசிரியரானவர் ஆக்கப+ர்வமான சிந்தனையாளராகவும், அறிவைக்
கற்றுக் கொள்பவராகவும், மாணவரை முன்னேற்றுவதற்கான புதிய பல்வேறுபட்ட கற்றற்சூழலை
உருவாக்கிப் பல்வேறுபட்ட நவீன போதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துபவராகவூம்
இருப்பதுடன், அவரால் வகுப்பறைக் கற்பித்தலில் அல்லது செயற்பாடுகளில் முழுத்தரமுகாமைத்துவம் பேணப்படுதலும்;
அவசியமாகின்றது. அதாவது
மாணவரின் கற்றலை உச்ச அளவிற்கு விருத்திசெய்தல், கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில்
தொடர் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல், அதே போன்று இச் செயற்பாடுகளின் செலவுகளை
சிக்கனமாக்கும் வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படல், கற்றல்-கற்பித்தற்
செயற்பாடுகளில் உள்ள குறைகபாடுகளைத் தேடியறிந்து அதற்கு உடனடிப்
பரிகாரநடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஆசிரியரும் மாணவரும் கூட்டுமுயற்சியாகத்
தொழிற்படல் அல்லது ஈடுபட்டுக் கற்றல், கால, நேரக் கட்டப்பாடுகள் போன்ற வகுப்பறை
முழுத்தரமுகாமைத்துவ விடயங்களானவை பாடசாலைகளில் இன்றையகாலக் கல்வி
நீரோட்டதிதிற்கு மிக அவசியமாகின்றன. இவற்றில் ஆசிரியர்கள் கூடிய கவனமுடையவர்களாக
இருத்தல் அவசியம்.
இவ்வாறான விடயங்களைச் சிறப்படைய
நிறைவேற்றுவதற்குப் ஆசிரியர்கள் பாடசாலைகளில் தரவட்டச் செயற்பாட்டை முன்னெடுத்தல்
மிக அவசியமாகின்றது. அதாவது பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாடரீதியாகவோ,
வகுப்புரீதியாகவோ தம் சுய ஆர்வத்தோடு தாமாகவே முன்வந்து ஒரு குழுவாகச் சேர்ந்து,
வாரத்தில் ஒரு நாளில் சில மணிநேரங்கள் ஒன்று கூடிக் கற்றல் - கற்பித்தல்
நடவடிக்கைகளில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றிக்
கலந்துரையாடித் தீர்வூகளைக் கண்டறிந்து, அவற்றை வகுப்பறைகளில் பிரயோகித்து ஒரு
நீரோட்டமான கற்றல்-கற்பித்தல் செயற்பாடு நடைபெறச் செய்யூம் ஒரு நுட்ப முறையாக இத் தரவட்டம் அமைகின்றது. இதன் மூலம் மானுட ஆக்கம் ஒன்றுபடல்
குறைகூறாப்பண்பு, சுய ஆர்வம் சொந்த உணர்வு என்பன மேலோங்கும். ஆசிரியர்கள்
மத்தியில் ஊக்கம் உயரும், மானிடத் தொடர்புகள் விருத்தியாகும்.
மேலும் இத்தரவட்டச் செயற்பாட்டினூடாக
பிரச்சினைகளைத் தீர்த்தல் தீர்மானம் எடுத்தல் ஆக்கபூர்வமான சிந்தனை பகுத்தறி சிந்தனை பயனுறுதிமிக்க தொடர்பாடல்கள் தன்னைத்தானேபுரிந்துகொள்ளல்
இஉகப்பானஆளிடைத்தொடர்பு பரிவுணர்வு மனவெழுச்சிகளை எதிர்கொள்ளல் உளநெருக்கடிகளை
எதிர்கொள்ளல் போன்ற திறன்கள் தன்னகத்தே
ஓர் ஆசிரியருக்கு விருத்தியாகும், பல்வேறு சிக்கல்களைத்தடுக்கும், தீர்க்கும்
சூழ்நிலை உருவாகும். ஏன் மொத்தத்தில் ஆசிரியர்களுக்குப் பணியாற்றுவதிலேயே ஒரு
மகிழ்ச்சியூடன கூடிய திருப்திநிலை உருவாகும்.
இதன்படி ஓர் ஆசிரியரானவர் மாணவர்
நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தப் பல்வேறு விடயங்களில் கவனம்
செலுத்தவேண்டியூள்ளவராகக் காணப்படுவதுடன் மாணவருடனான எச்செயற்பாட்டிற்கு முன்னும்
சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியதும்
மிக அவசியமாகின்றது. இத்திட்டமிடற் செயற்பாடானது அவ்வாசிரியரின் தொழில்
வண்மையினாலும், அறிவினாலும், அனுபவத்தினாலுமேயே தீர்மானிக்கப்படும். எனவே
ஆசிரியர்கள் அனைவரும் எவ்வெவ்வழிகளில் தமது
வண்மையை விருத்தி செய்ய முடியுமோ அவ்வவ்வழிகளை எல்லாம் பயன்படுத்தி தம் வாண்மையை
மிளிரச் செய்து அதன் மூலம் தற்கால உலகில் எச்சவாலிற்கும் முகம் கொடுக்கும் ஒரு
நல்ல மாணவச் சமுதாயதை உருவாக்க ஒன்றினைவதே சாலச்சிறந்ததாகும்!
என்.எஸ்.செல்வரத்தினம்
பிரதி அதிபர்,
வ/வவுனியா தமிழ்
மத்திய மகாவித்தியாலயம்,
(தேசிய
பாடசாலை) வவுனியா.

Nice sir regarding to quality circles essay fine
ReplyDeleteNice
ReplyDelete